தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை போக்சோவில் கைது - ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலை: சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்த தந்தை போக்சோவில் கைது
செந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்த தந்தை போக்சோவில் கைது

By

Published : Feb 26, 2021, 6:17 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாணவியை ஆசிரியர்கள் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.

அப்போது மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறையினர் நடத்திய விசாரணையில், சொந்த மகளையே தந்தை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் லைவ்: மங்களூருவில் ஒடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details