திருவண்ணாமலையைச் தொழிலதிபரான ஜே.செல்வன் என்பவரின் மருமகள் எஸ். அருணா பெயரில் இடத்தை வாங்கி அவசர அவசரமாக அந்த இடத்தில் கல்குவாரி ஜல்லி மெஷின் மற்றும் ஹாட் ப்ளாண்ட் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலத்தை சுற்றி விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலம், வீடுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அந்த இடத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. மேலும் ஆற்காடு லூதரன் திருச்சபை ஏ எல் சி சர்ச்சுக்கு சொந்தமான நிலமும் உள்ளது.
அந்த இடத்தில் ஏற்கனவே உள்ள கல்குவாரியால் சுற்றுப்புற பகுதியில் மாசு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக கல்குவாரி ஜல்லி மிஷன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் மேலும் காற்று மாசு ஏற்படும் வகையில் ஹாட் ப்ளாண்ட், ஜல்லி மிஷின்கள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தட்டிப் பறிக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.