தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் சங்கமம் மாநாடு!

திருவண்ணாமலை: மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மாநில அளவிலான விவசாயிகள் சங்கமம் மாநாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்டது.

farmers-sangamam-conference-in-tiruvannamalai
farmers-sangamam-conference-in-tiruvannamalai

By

Published : Oct 12, 2020, 4:24 AM IST

திருவண்ணாமலை நகரின் செங்கம் சாலையில் உள்ள அத்தியந்தல் கிராமம் அருகே திறந்தவெளி மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக விவசாயிகளின் சங்கமம் மாநாடு நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்த மாநாட்டில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநில மாநாட்டில் "மத்திய பாஜக அரசின் விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்" என்ற தலைப்பில் புதிய புத்தகத்தை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட கோபண்ணா பெற்றுக்கொண்டார்.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொலைபேசி வாயிலாக இந்த மாநாட்டில் உரையாற்றினார்.

இதையும் படிங்க:மீண்டும் திவேத்தியா மேஜிக் - ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details