தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகளிடம் பால் வாங்க மறுப்பு - ஆவின் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

By

Published : Apr 24, 2020, 1:10 PM IST

திருவண்ணாமலை: விவசாயிகளிடம் பால் வாங்க மறுப்பு தெரிவித்ததால் ஆவின் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் முற்றுகை
விவசாயிகள் முற்றுகை

திருவண்ணாமலை அடுத்துள்ள புனல்காடு கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அங்குள்ள ஆவின் பாலகம் தினசரி பால் விநியோகம் செய்ய வரும்போது, உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் விவசாயிகளை அவதூறான வார்த்தைகளால் திட்டுவதும், பால் கொள்முதல் செய்யாமல் புறக்கணிப்பு செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் முற்றுகை

இதையடுத்து, நேற்று (ஏப்ரல் 23) காலை விவசாயிகள் ஆவின் பாலகத்தில் பால் விநியோகம் செய்ய சென்றபோது, புனல்காடு உற்பத்தியாளர் சங்கத்தில் பலரிடம் பாலை வாங்க முடியாது என்று பணியார்கள் புறக்கணித்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை அதன் வாயில் முன்பு வைத்துக் கொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து ஆவின் நிறுவன பணியார்கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details