தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்! - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருவண்ணாமலை: உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

By

Published : Jan 4, 2021, 1:45 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று (ஜன.04) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அலுவலகத்தில் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு வேலியை தகர்த்தெறிந்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயில் பகுதியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் காவல் துறை:

இதையடுத்து, அங்கிருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தபோதிலும், சிலர் ஆட்சியர் அலுவலக வாயிலில் படுத்து, உருண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

மேலும், மாவட்ட ஆட்சியர் தங்களை சந்திக்கும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ’எங்களுக்கு ஒரு விலை, ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஒரு விலை’ - நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details