திருவண்ணாமலை: செய்யாறில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாபாரிகள் இன்று (ஆக. 4) நெல் கொள்முதல் செய்யாததால், அதனை கண்டித்து வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே ஆற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அதன் துறை சார்பில் புதியதாக 10 கடைகள் கட்டப்பட்டுள்ளது அந்த கடைகளை வாடகைக்கு ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த கடைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் வெளி நபர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என கூறி பொது ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யவில்லை என தெரிகிறது.