தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - Green away protest

திருவண்ணாமலை: எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி அப்பகுதி விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

By

Published : Jul 28, 2020, 2:59 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரும்பட்டம் பகுதியில் எட்டு வழிச்சாலை எதிர்த்து, விவசாயிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடி ஏந்தியும், கண்ணில் கருப்பு துணி கட்டியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறக் கோரியும், இ.ஐ.ஏ (EIA) 2020 மசோதாவை வாபஸ் பெற கோரியும், 2020 மின் திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும் தங்கள் உயிர் போனாலும் தங்கள் விளைநிலத்தை விட்டுத்தர மாட்டோம் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க சுமார் 30க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details