தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 15, 2023, 3:29 PM IST

ETV Bharat / state

விவசாயிகளின் மனுக்களை கிடப்பில் போடும் வேளாண் துறை அதிகாரிகள்- விவசாயிகள் கீரை கடைந்து போராட்டம்!

திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு இலவசமாக தர வேண்டிய விதைகள் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்காததால் விவசாயிகள் போராட்டம்

farmers protest against agri department for not responding  petition
விவசாயிகள் கீரை கடைந்து சாப்பிட்டு போராட்டம்

திருவண்ணாமலை: விவசாயிகளின் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், தீர்வும் அளிக்காமல் அலட்சியத்துடன் இருப்பதாக விவசாயிகள் குற்றும் சாட்டுகின்றனர். விவசாயிகளின் மனுக்களை மண்சட்டியில் கீரை கடைவது போல் கடைந்து சாப்பிட்டு விட்டு செல்வதாக கூறி வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் முன்பாக விவசாயிகள் நேற்று (ஜூலை 14) நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகள் கீரை கடைந்து சாப்பிட்டு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி புருசோத்தமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் விவசாயிகளுக்கு இலவசமாக தர வேண்டிய விதை மற்றும் தென்னை மர கன்றுகள் உள்ளிட்டவைகளை இன்று வரை தராமல் இருப்பதாக தெரிவித்தனர்

அதனை தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளை அலைக்கழிப்பதாகவும், இது குறித்து கேள்வி கேட்கும் விவசாயிகளை தாக்க வருவதாகவும், பொய் வழக்கு போடுவதாகவும் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று விதைகள் மற்றும் தென்னை கன்றுகள் ஆகியவற்றை வட்டார வேளாண் அதிகாரியிடம் சென்று கேட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை என்றும் விவசாயி குற்றம் சாட்டினார்

இதையும் படிங்க:காவிரி நீர் கடைமடையை அடைந்தும் காயும் விவசாய நிலங்கள்.. அய்யாவையனாறு பகுதி விவசாயிகள் வேதனை!

மேலும், ஒவ்வொரு மாதமும் அந்தந்த வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் விவசாயிகள் வட்டார குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை அதிகாரிகள் செவிகுடுத்து கேட்பது இல்லை என்றும், விவசாய கூட்டத்தில் அதிகாரிகள் அலட்சியமாகவும், பாராமுகமாக செயல்படுவதாகவும் கூறினார்.

இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். குறிப்பாக விவசாயிகளின் மனுக்களின் மீது எந்த வித நடவடிக்கையும் வேளாண் இணை இயக்குனர் எடுப்பது இல்லை என்றார்

பின்னர், விவசாயிகளின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த ஒரு தீர்வும் விவசாயிகளுக்கு குடுக்காமல், மனுக்களை கீரை கடைவது போல் கடைந்து அதிகாரிகள் சாப்பிட்டு விட்டு செல்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனை விளக்கும் விதமாக மண்சட்டியில் கீரை கடைந்து விவசாயிகள் சாப்பிட்டு வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தின் முன்பாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாங்கள் சென்னை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் விவசாயி குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:இலங்கை சிறையில் இருந்த 22 தமிழக மீனவா்கள் சென்னை திரும்பினர்!

ABOUT THE AUTHOR

...view details