திருவண்ணாமலை மாவட்டம் மேல்கரிப்பூர் கிராமத்தில் மணிலா என்று அழைக்கப்படும் வேர்க்கடலை அதிகமாக பயிரிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இதனை மூன்று பட்டங்களில் விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம், மாசிப் பட்டம் என மூன்று பட்டங்களில் தண்ணீர் இருப்பை பொறுத்து மணிலா வேர்க்கடலை பயிரிடப்படுகிறது.
தற்போது, பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலைகளை அறுவடை செய்யப்படும் பணி செய்யப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேர்க்கடலையை அறுவடை செய்து வருகின்றனர். தற்போது அறுவடை செய்யப்படும் மணிலா வேர்க்கடலை அடுத்த சாகுபடிக்கு மிஞ்சுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.