திருவண்ணாமலை:நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதற்காக 16 ஆண்டுகளுக்கு முன் சுமார் 18ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டன. தற்போது 16 ஆண்டு காலமாகியும் என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட அந்த நிலங்களை நிலக்கரி எடுக்க பயன்படுத்தாமல் காலதாமதம் செய்து வந்தது. இந்த நிலையில் சில வாரங்களாக அந்த நிர்வாகம் சுரங்கம் அமைப்பதற்காக அந்த நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை அழித்து நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த செயலை கண்டிக்கும் விதமாக கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆடு மாடுகள் போல் இலை தழைகளை உண்டு தங்கள் எதிர்ப்பை காட்டினர். தற்போது உணவு தட்டுப்பாடு இருந்துவரும் நிலையில் விலை நிலங்களை இப்படி அளித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும், விலை நிலங்களை அளித்துவிட்டு என்எல்சி நிறுவனம் எதை சாப்பிடப்போகிறது என கேள்வி எழுப்பிய விவசாயிகள் இது போல இலை தலைகளை தான் அவர்கள் சாப்பிட வேண்டும் என காட்டமாக கூறினர்.
புவி வெப்பமயமாதல் காரணமாக மாற்று எரிசக்தி மின் உற்பத்தியில் காற்றாலை, சூரிய மின்சக்தி, நீர்மின் சக்தி, பையோ கழிவு ஆற்றல் மின் சக்தி, கடல் அலை விசை மூலம் மின்சக்தி உள்ளிட்ட பல வகையில் தற்போது மின்சாரம் தயாரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அனல் மின்சக்தி மூலம் சுமார் இரண்டு விழுக்காடு அளவுக்கு மட்டுமே மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.