தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளின் வாழ்வில் கசப்பைத் தந்த பாகற்காய் - கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்! - செடியில் பழுத்து தொங்கும் பாகற்காய்

திருவண்ணாமலை: கரோனா பாதிப்பு காரணமாக, பயிரிடப்பட்ட பாகற்காய்களை அறுவடை செய்யமுடியாமல், செடியிலேயே அழுகும் நிலையில் இருப்பதைக் கண்டு விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

bitter gourd
bitter gourd

By

Published : May 13, 2020, 8:14 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள், தங்களது நிலத்தில் பாகற்காய் பயிரிட்டு விவசாயம் செய்துவருகின்றனர். பாகற்காய் விளைவிப்பதுதான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட பாகற்காய்கள் அறுவடை செய்யும் நிலையில் செடிகளில் காய்த்துள்ளது.

தற்போது, ஊரடங்கு உத்தரவால் காய்த்து தொங்கும் பாகற்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாகற்காய்கள் அனைத்தும் பழுத்து அழுகும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பரவலாக பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டதால், மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேலு என்பவர் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, தனது 50 சென்ட் விவசாய நிலத்தில் 6 மாத பயிரான பாகற்காய் பயிரிட்டு பாதுகாத்துவந்தார்.

சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ள பாகற்காய்

பயிரிட்டு இரண்டு மாதத்திற்குப் பிறகு அறுவடை பணி தொடங்கவிருந்தது. ஆனால், தற்போது போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் 50 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்ட பாகற்காய், அறுவடை செய்யாமல் அழுகிய நிலையில் நிலத்திலேயே இருப்பது வருத்தமளிக்கிறது. இதனால், விவசாயிகளின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயி வேலு கண்ணீரோடு தெரிவித்தார்.

பழுத்து தொங்கும் பாகற்காய்

இவரைப் போன்று, அப்பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் தங்கள் நிலங்களில் பாகற்காய் பயிரிட்டு, விற்பனை செய்து லாபம் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். இதன் மூலம் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பார்வையிட்டு, மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயி வேலு, அப்பகுதியில் பாகற்காய் பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details