தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம் - கர்ப்பிணிகள் பங்கேற்பு! - கீழ்பென்னாத்தூரில் குடும்பக்ட்டுப்பாடு விழைப்புணர்வு முகாம்

திருவண்ணாமலை: நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கான குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்துகொண்டனர்.

Family Planning Awareness Camp In Tiruvannamalai

By

Published : Oct 10, 2019, 11:12 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பொது சுகாதார மையத்தில் குடும்பக்கட்டுப்பாடு குறித்த சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையில் கிராம சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சமுதாய சுகாதார செவிலியர் ஆகியோர் குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு பயிற்சியை அளித்தனர்.

இதையடுத்து, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதன் அவசியத்தையும், அதனால் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காதல் கணவரை மீட்டுத் தாருங்கள்' - ஆர்டிஓ காலில் விழுந்து கதறிய இளம்பெண்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details