தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம் அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தற்போதைய அறிவிப்பு

திருவண்ணாமலை: முகக்கவசம் அணியாமல் வீட்டிலிருந்து வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Face shield 100 fine if not worn - District Collector notification
Face shield 100 fine if not worn - District Collector notification

By

Published : Jun 16, 2020, 12:16 AM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், " திருவண்ணாமலை மாவட்டத்தில் 30,837 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றுவரை 714 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 306 பேருக்கு இன்னும் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா நோய் தொற்று கட்டுப்படுத்துவதற்காக தனியார் மருத்துவர்கள் 165 மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் நடத்தி வரும் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் ஆகியவை ஏற்கனவே எவ்வாறு செயலாற்றியதோ அதேபோல் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் திறந்து வைத்து சேவை தொடங்க வேண்டும் .

இ பாஸ் பெறாமல் அனுமதியின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்திற்கு வெளியே கொண்டு சென்று விடப்படுவார்கள். வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவர்களைக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் புதியதாக 20 கோவிட் ரோந்து வாகனங்கள் நாளை முதல் இயக்கப்படும் .

பேருந்தில் பயணம் செய்ய வரும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே நடத்துனர் அவர்களை பேருந்தில் ஏற்றவேண்டும்” என்றார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details