தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பைச் சார்ந்த ஏரிகளை, அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 31.20 கோடி மதிப்பீட்டில், 59 ஏரிகளில் புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதன்மூலம் 6,034.81 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும். திருவண்ணாமலை மத்திய பெண்ணையாறு வடிநிலக் கோட்டம் மூலம் 54 ஏரிகள் ரூ. 28.89 கோடி மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம் கீழ் பாலாறு வடிநிலக் கோட்டம் மூலமாக வெம்பாக்கம் வட்டத்தில் 5 ஏரிகள் ரூ 2.31 கோடி மதிப்பீட்டிலும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிமராமத்து பணிகள், நீரினை பயன்படுத்தும் சங்கங்கள் மூலமாக, நியமன முறையில், விவசாயிகளின் 10 விழுக்காடு பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்கவும், தண்ணீரினை சேமித்து பாசன உறுதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.