தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க ஊக்குவிப்பு! - தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் முழுமையாக வாக்களிக்க ஊக்குவிப்பு

திருவண்ணாமலை: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைப்பெற்றது.

Encouragement
Encouragement

By

Published : Feb 6, 2021, 6:58 PM IST

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கூறுகையில், "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வாக்காளர் முகாம்கள் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளிடையே தேர்தல் தொடர்பாக பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிக்கான அடிப்படை வசதிகள் உறுதி செய்ய வேண்டும்.

தேர்தலின் போது வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்ல தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலி Pwd App பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, அதில் அவர்களது மாற்றுத்திறன் குறித்து பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி வசதிகளை அவர்கள் வாக்களிக்க உள்ள இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த செயலி மூலம் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தேவையான திருத்தம், நீக்கம் செய்யவும், தேர்தல் தொடர்பான குறைகளை தெரிவிக்கவும் பயன்படுத்திக்கொள்ளாம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details