திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதிகளில் ஒற்றை ஆண் யானை பல ஆண்டுகளாக சுற்றித்திரிகிறத. இந்நிலையில் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள இந்த ஓற்றை யானை தாக்குதலினால் மாட்டுக்கானூர், நஞ்சான்கொல்லை, பெருங்கட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வீடுகளும், நிலங்களும் சேதமடைந்துள்ளன.
இதில் மாட்டுக்கானூர் பகுதியைச் சோந்த குப்புராஜ், மல்லிகா, சுசீலா நஞ்சான்கொல்லை கிராமத்தினைச் சேர்ந்த சின்னபையன் மற்றும் பலராமன் ஆகியோரின் விவசாய நிலம், வீடுகள் சேதமடைந்துள்ளது.