திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 ஆவது தேசிய வாக்காளர் தின விழா நேற்று (ஜன.25) மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் கொண்டாடப்பட்டது.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவிகளுக்கு தேர்தல் தொடர்பான கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுன.