தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்திய 6 பேர் கைது - தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்

திருவண்ணாமலை: பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடத்தியவர்கள் கைது
கடத்தியவர்கள் கைது

By

Published : Sep 30, 2020, 6:53 AM IST

பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலைக்கு அடிக்கடி தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது.

திருவண்ணாமலை அடுத்த பெரிய கோலாபாடி அருகே உள்ள திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்படி, மாவட்ட ஏஎஸ்பி ஸ்ருதி கிரண் மேற்பார்வையில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமையில், காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேன், கார் ஒன்றை காவல் துறையினர் மடக்கி பரிசோதனை செய்தனர்.

சோதனையில், ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்
இதுதொடர்பாக காவல் துறையினர், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, கொள்ளைக்கொட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன், துர்க்கைநம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ், கணேஷ், செங்கம் நகரைச் சேர்ந்த காதர் சபி, நவ்ஷத்அலி உள்ளிட்ட 6 பேரைகாவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் அவர்களிடமிருந்து காவல் துறையினர் ரூபாய் 12 லட்சம் ரொக்கப் பணம், மினி வேன், இண்டிகா கார், போதைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details