தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: வண்டலூர் -மிஞ்சூர் சாலையில் பாறாங்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

ஓட்டுநர் உயிரிழப்பு
ஓட்டுநர் உயிரிழப்பு

By

Published : Jan 12, 2021, 4:15 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (56). இவர் திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு லாரியில் பாறாங்கற்கள் ஏற்றிக்கொண்டு சென்றார்.

வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. லாரியின் கண்ணாடி உடைந்து குமார், முன்பக்கம் விழுந்தார்.

லாரி கவிழ்ந்து விபத்து

அப்போது சில பாறாங்கற்கள் அவர் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சக வாகன ஓட்டிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்தபோது எதிரே எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: கார் தீ விபத்தில் நீதிபதியின் கணவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details