திருவண்ணாமலை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை பிரிவில் தலைமை மருத்துவராகக் கமலக்கண்ணன் பணியாற்றி வருகிறார். காவல்துறை சார்பில் சந்தேகத்துக்குரிய மரணம் ஏற்படும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இரவு நேரங்களில் பிராதே பரிசோதனை செய்ய வற்புறுத்துவதாகவும், மருத்துவர்களை மிரட்டுவதாகவும் கூறி இது தொடர்பாகப் பிரேதப் பரிசோதனை பிரிவின் தலைமை மருத்துவர் கமலக்கண்ணன் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சந்திக்கச் சென்றுள்ளார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ், டாக்டர் கமலக்கண்ணனை தரக்குறைவாகப் பேசி மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி உன்னை வேறு மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து விடுவேன் என ஒருமையில் பேசி மிரட்டி உள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று பிற்பகல் மருத்துவர்களிடம் விரோத போக்கைக் கடைப் பிடிக்கும் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'அவுட்சோர்சிங் முறையை கைவிடுக' - தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள்