தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாலையில் உதித்த சூரியன்!

திருவண்ணாமலையில் மொத்தமுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆறு இடங்களை கைப்பற்றி, திமுக தனது பலத்தை நிரூபித்துள்ளது.

thiruvannamalai
திருவண்ணாமலை

By

Published : May 3, 2021, 4:33 PM IST

திருவண்ணாமலை தொகுதி திமுக கோட்டையாக இருந்து வருகிறது. மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில், கடந்த முறை 5 தொகுதிகளில் திமுகவும், 3 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தற்போது நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், சொல்லியடித்தது போலவே திமுக தனது கெத்தைக் காட்டியது. மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 6 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, கலசப்பாக்கம் தொகுதியில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது.

அங்கு திமுக சார்பில் பெ சு தி சரவணன், அதிமுக சார்பில் வி பன்னீர்செல்வம் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் 9,222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தொகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை விபரம்:

வந்தவாசி – திமுக வெற்றி

1.அம்பேத்குமார்(திமுக) – 1,02,064
2.முரளி(பாமக) – 66,111
3.பிரபாவதி(நாம் தமிழர் கட்சி) – 9,284
4.வெங்கடேசன்(அமமுக) – 1,728
5.சுரேஷ்(மக்கள் நீதி மய்யம் – 1,692
6. நோட்டா – 1,769
வாக்கு வித்தியாசம் – 35,953

செங்கம் (தனி) – திமுக வெற்றி

1.கிரி(திமுக) – 1,08,081
2.நைனாக்கண்ணு(அதிமுக) – 96,511
3.வெண்ணிலா(நாம் தமிழர் கட்சி) – 12,080
4.அன்பு(தேமுதிக) – 2,769
5. சுகன்ராஜ்(இந்திய ஜனநாயக கட்சி) - 828
நோட்டா – 1,085
வாக்கு வித்தியாசம் – 11,570

கலசப்பாக்கம் – திமுக வெற்றி

1. பெ.சு.தி. சரவணன்(திமுக) – 94,134
2. பன்னீர்செல்வம்(அதிமுக) - 84,912
3. பாலாஜி(நாம் தமிழர் கட்சி) – 8,822
4. நேரு(தேமுதிக) – 2,756
5. திருநாவுக்கரசு(சுயேட்சை) – 765
நோட்டா – 1,595
வாக்கு வித்தியாசம் – 9,222

கீழ்பென்னாத்தூர் – திமுக வெற்றி

1.கு.பிச்சாண்டி(திமுக) – 1,04,675
2. செல்வகுமார்(பாமக) – 77,888
3.ரமேஷ்பாபு(நாம் தமிழர் கட்சி) – 11,539
4.கார்த்திகேயன்(அமமுக) – 2,191
5.சுகானந்தம்(மக்கள் நீதி மய்யம்) – 1,437
நோட்டா – 961
வாக்கு வித்தியாசம் – 26,787

ஆரணி – அதிமுக வெற்றி

1.சேவூர் எஸ்.ராமச்சந்திரன்(அதிமுக) – 1,02,961
2.எஸ்.எஸ்.அன்பழகன்(திமுக) – 99,833
3.பிரகலதா(நாம் தமிழர் கட்சி) – 10,491
4.மணிகண்டன்(மக்கள் நீதி மய்யம்) – 2,213
5.பாஸ்கரன்(தேமுதிக) – 1,861
நோட்டா – 1,690
வாக்கு வித்தியாசம் – 3,128.
திருவண்ணாமலை – திமுக வெற்றி

1.எ.வ.வேலு(திமுக) – 1,37,876
2.தணிகைவேல் (பாஜக) – 43,203
3.கமலக்கண்ணன்(நாம் தமிழர் கட்சி) – 13,990
4.அருள் (மக்கள் நீதி மய்யம்) – 6,240
5.பஞ்சாட்சரம் (அமுமுக) – 2,108
நோட்டா – 2,194.
வாக்கு வித்தியாசம் – 94,673
போளூர் – அதிமுக வெற்றி
1.அக்ரி கிருஷ்ணமூர்த்தி(அதிமுக) – 97,732
2. கேவி சேகரன்(திமுக) – 88,007
3. லாவண்யா – நாம் தமிழர் கட்சி – 10,199
4. கலாவதி – மக்கள் நீதி மய்யம் – 1,580
5.விஜயகுமார் – அமமுக – 656
நோட்டா – 1,144
வாக்கு வித்தியாசம் – 9,725

செய்யாறு – திமுக வெற்றி

1.ஜோதி(திமுக) – 1,02,460
2.தூசி மோகன் (அதிமுக)– 90,189
3.பீமன் (நாம் தமிழர் கட்சி) – 12,192
4.மயில்வாகனன் (மக்கள் நீதி மய்யம்) – 2,429
5.வரதராஜன் (அமமுக) – 1,760
நோட்டா – 1,895
வாக்கு வித்தியாசம் – 1,2271

ABOUT THE AUTHOR

...view details