தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு முதலமைச்சர் ஆதரவளிக்காதது ஏன்? பொன்முடி கேள்வி - delhi farmers protest

தான் ஒரு விவசாயி எனக் கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்காதது ஏன் என திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.

dmk protest thiruvannamalai
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு முதலமைச்சர் ஆதரவளிக்காதது ஏன்? பொன்முடி கேள்வி

By

Published : Dec 5, 2020, 8:20 PM IST

திருவண்ணாமலை:திருவண்ணாமலை தெற்கு, வடக்கு திமுக சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறக்கோரியும், வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் அதிமுக அரசையும், கண்டித்து திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ. வேலு, முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினர்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொன்முடி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கச் சென்ற தமிழ்நாடு விவசாயிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தியது ஏன்? எனவும், தான் ஒரு விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சர், டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திமுக போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details