திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பயிற்சி பாசறை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (அக்.22) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மு.க.ஸ்டாலின், '2024 நாடாளுமன்ற தேர்தல் நமக்காகவே காத்துக்கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றிக்கனியை நாம் சுவைக்க வேண்டும். 2021-ல் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது, திருவண்ணாமலை தான். திமுகவின் கோட்டையாக இருப்பதும் இந்த திருவண்ணாமலைதான்.
தினமும் ஓடி ஓடி எவ்வளவு தான் உழைத்து களைத்தாலும், உங்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு Energy வந்துவிடுகிறது. ஏனெனில், நீங்கள் தான் எனக்கு Secrect of My Energy. திருவண்ணாமலையும் தீபமும் போலதான், திருவண்ணாமலையும் திமுகவும். இதை யாராலும் பிரிக்க முடியாது.
முதல்முறையாக 1957 தேர்தலில் போட்டியிட்டு 15 வெற்றி பெற்றனர். அதில் மூன்று பேர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள். முதல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது 2 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒரு தொகுதி இந்த தொகுதி. இதில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரா.தர்மலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இதன் பின்னர், திருவண்ணாமலை இடைத்தேர்தல் வெற்றியே1967-ல் திமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது.
திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் கவனமாக சரி பார்க்க வேண்டும். எனக்கான உற்சாகத்தைத் தரும் திமுக தொண்டர்கள் அனைவரும் அரசின் அனைத்து திட்டங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெற்றி ஒன்றே தான் நமக்கான இலக்காக இருக்க வேண்டும்.