திருவண்ணாமலை:மாவட்டத்தில் கிரிவலப் பாதை பேரறிஞர் அண்ணா நுழைவாயில் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை ஜூலை 8ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 15) திருவண்ணாமலை திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் தலைமையில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.