தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

க. அன்பழகன் மறைவு: திருவண்ணாமலையில் அமைதி ஊர்வலம் - K. Anbazhagan death

திருவண்ணாமலை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவெய்தியதையடுத்து, நகர திமுகவினர் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தினர்.

dmk mourning rally
dmk mourning rally at tiruvannamalai

By

Published : Mar 8, 2020, 8:06 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் மறைவிற்கு கீழ்பெண்ணாத்தூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கு.பிச்சாண்டி தலைமையில், திமுகவினர் காமராஜர் சிலை சந்திப்பில் அமைதிப் பேரணி தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தனர். இறுதியாக ஊர்வலம் அண்ணா சிலையை வந்தடைந்தது.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் உருவப்படத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவைச் சேர்ந்தவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திமுகவினர் அமைதி ஊர்வலம்

இந்த ஊர்வலத்தில் நகரச் செயலாளர் கார்த்திக்வேல் மாறன் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:'அன்பழகனின் மறைவுச் செய்தியைக் கேட்டு ஆழ்ந்த துயரமடைந்தேன்' - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details