திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி, பேரூராட்சி அலுவலகங்களில் கரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி மருந்துகள் இருப்பு உள்ளதா என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி ஆய்வு செய்தார்.
செங்கம், தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்களுடன் கரோனா வைரஸ் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டதா என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
மேலும், தமிழ்நாடு அரசு மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் கிருமி நாசினி தெளிப்பான் பயன்படுத்தபடுகிறதா, எனவும் அரசு மூலம் தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கிய தொகை முழுமையாக வந்தடைந்ததா என்பது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து செங்கம் பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்று பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா எனவும் கிரி ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், அரசு மூலம் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், ஆயுள்காப்பீடு திட்டத்தை அரசே முன்வந்து பதிவு செய்து தரவேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
பேரூராட்சி அலுவலகங்களை ஆய்வு செய்த திமுக எம்எல்ஏ இந்த ஆய்வில் செங்கம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், சகுந்தலா, ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ!