திருவண்ணாமலை:செய்யாறில் திமுக நகர மன்ற கூட்டம், மன்ற தலைவர் மோகனவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது, 17 திமுக உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, திமுக நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திமுக நகர மன்ற தலைவர் கூட்டத்தை விட்டு வெளியே வந்து, திமுக நகர மன்ற உறுப்பினர்களிடம் எவ்வளவோ சமாதான பேசியும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளே செல்லவில்லை. இதனால் நகர மன்ற கூட்டம் நடக்காமல் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.