தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் - differently abled persons in thiruvannamalai

திருவண்ணாமலை: 195 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பிஸ்கட், சாக்லேட், குளிர் பானங்கள் அடங்கிய தொகுப்பு, அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.

உதவிய மாவட்ட ஆட்சியர்
உதவிய மாவட்ட ஆட்சியர்

By

Published : Apr 18, 2020, 11:01 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில், லிட்டில் ஹார்ட்ஸ் சொசைட்டி, 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய இல்லத்தில் உள்ள 50 இல்ல வாசிகள், புனித அமலராக்கினி மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 50 இல்லவாசிகள்,

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

மேலும் க்யூர் பெண்கள் மனநல காப்பகம் , 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி நிறுவனமான கௌசானல் சமூக மறுவாழ்வு மேம்பாட்டு இல்லத்தில் உள்ள 60 இல்லவாசிகள், அரசு தொழுநோயால் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 35 இல்லவாசிகள் என மொத்தம் 195 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின்படி மேற்கண்ட இடங்களில் வசிக்கும் 195 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பிஸ்கட், சாக்லேட், குளிர்பானங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

உதவிய மாவட்ட ஆட்சியர்

அதன்படி கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேக்களூர் ஊராட்சியில் செயல்பட்டுவரும் பெண்கள் மனநல காப்பகம் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழில்பயிற்சி நிறுவனமான கௌசானல் சமூக மறுவாழ்வு மேம்பாட்டு இல்லத்தில் உள்ள 60 மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கண்ட ஆவின் தொகுப்பு மற்றும் அரிசி மளிகை பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வழங்கினார்.

இதையும் படிங்க: சிறு குறு விற்பனையாளர்களுக்கு தரகு தொகையில் 50 விழுக்காடு சலுகை - அமேசான் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details