திருவண்ணாமலை மாவட்டம் அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாளை(பிப்.10) முதல் வரும் 26ஆம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று(பிப்.9) நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "நாளை முதல் நடைபெற உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.