திருவண்ணாமலை: மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தலைமைச் செயலாளர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை முதன்மை செயலாளர் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் பள்ளி ஒன்றில் சதுரங்க போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.