உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுநோய் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டும், 33 பேர் உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிரமடைந்து வருகிற கோவிட்-19 தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளது.
ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப்பொருள்கள் விற்பனை உள்ளிட்ட கடைகள் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், விற்பனை செய்த பொருள்களை கடைகளில் உட்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது.