திருவண்ணாமலை மாவட்டம் நகராட்சிகள், பேரூராட்சிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் கருவி பொருத்தப்பட்ட டிராக்டர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர், "திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக விவசாயிகளிடமிருந்து வாடகைக்குப் பெறப்பட்ட 60 டிராக்டர்களில் ரூ.2.50 கோடி மதிப்பில் கிருமிநாசினி தெளிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.