திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி அரசு கூடுதல் தலைமை செயலர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மழை, வெள்ளம் மற்றும் அவசர காலங்களில் மீட்பதற்காக படகு ஒத்திகை, எரிவாயு உருளை உட்பட பல்வேறு வகைகளில் ஏற்படும் தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை ஆகியவை செய்து காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை வட்டம் கணந்தம்பூண்டி ஊராட்சியில் 51 நரிக்குறவர்கள், 16 இருளர் குடும்பங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம், பழங்குடியினருக்கு வீடுகள் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூபாய் 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் அரசு கூடுதல் தலைமைச் செயலர் நேரில் ஆய்வு செய்து அங்குள்ள பொதுமக்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க : புதிதாக அதிகரித்துள்ள போதைப் பொருள் - துணை கண்காணிப்பாளர் வின்சென்ட்