தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நேற்று (ஜூலை 31) கிரிவலப்பாதையிலுள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் மொட்டையடித்து, பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Devotees pay homage on the eve of the Aadi Friday Festival
Devotees pay homage on the eve of the Aadi Friday Festival

By

Published : Aug 1, 2020, 5:57 PM IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, ஆண்டுதோறும் பக்தர்கள் பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து கோயில்களையும் மூடி, சீல் வைத்து, தடுப்புகள் அமைத்து, பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் நுழையாதவாறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் தற்போது தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளதால், வெளியூர்களிலிருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கள் குலதெய்வக் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, கோழி பலியிட்டு நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.

மேலும், கோயிலுக்கு வெளியே தேங்காய் உடைத்து இறைவனை வழிபட்டு செல்ல கூடிய நிலைமையும் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலும் கோயில் வளாகம், சாதாரண நாட்களில் பக்தர்கள் வழிபடும் எண்ணிக்கையை விட சற்று குறைந்தே காணப்பட்டது.

இதையும் படிங்க:ஊரடங்கு எதிரொலி: கம்பத்தடி ஆஞ்சநேயருக்கு ஆடி 18 விழா ரத்து

ABOUT THE AUTHOR

...view details