திருவண்ணாமலை:ஆடி கிருத்திகையை முன்னிட்டு,பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் ராஜ கோபுரம் அருகே உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ஆடி கிருத்திகை: திருவண்ணாமலையில் காவடி எடுத்த முருக பக்தர்கள் - Thiruvannamalai district Annamalaiyar Temple
ஆடி கிருத்திகை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முருக பக்தர்கள் காவடி எடுத்து பரவசத்துடன் நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர்.
காவடி எடுத்த முருக பக்தர்கள்
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் 1,008 காவடிகளை ஏந்தியவாறு அண்ணாமலையார் கோயிலின் திட்டு வாசற்படி வழியாக நான்கு மாடவீதிகளிலும் ஊர்வலமாக சுற்றி வந்து நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர்.
இதையும் படிங்க:'சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை' - ஆன்மீக நிகழ்வில் ரஜினிகாந்த் பேச்சு