திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். பாடல் பெற்ற தலமான அண்ணாமலையார் கோயில் மீது சமயக்குறவர்களான நால்வரும் தேவாரத் திருபதிகம் பாடியுள்ளனர். சிவனே இங்கு மலையாக இருப்பதாக சைவர்கள் நம்புவதால், இந்த பௌர்ணமி தினங்களில் இங்கு கிரிவலம் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்த கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில், மலை மீது மகா தீபம் ஏற்றப்படும் கார்த்திகை தீப திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். கடந்தாண்டு கார்த்திகை திருவிழாவின்போது பொதுமுடக்க தளர்வுகள் இருந்தபோதும், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.