திருவண்ணாமலை: செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் நடுவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாறை சென்னியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்தும் கிடாவெட்டியும்; தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவின்போது தங்களது நேர்த்திக்கடனை செலுத்த சுற்றுவட்டாரப்பகுதி பக்தர்கள் தயாரான நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு ஆற்றில் இறங்கி புனித நீராடுவதற்கும் பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.