தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் 3000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி

திருவண்ணாமலை: சொரத்தூர் கிராமத்தில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள சொரத்தூர் கிராமத்தில்  3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள சொரத்தூர் கிராமத்தில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

By

Published : Mar 20, 2021, 7:45 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள சொரத்தூர் கிராமத்தில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல்துறையினர் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு சின்டெக்ஸ் டேங்கில், 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலும் 300 லிட்டர் சாராயமும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து சாராய ஊறலை பறிமுதல் செய்தஅலுவலர்கள் அவற்றைகீழே கொட்டி அழித்தனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:'தமிழ்நாட்டின் கடனை அடைத்து 50 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்பை வழங்கும் திட்டம் எங்களிடம் உள்ளது'

ABOUT THE AUTHOR

...view details