திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் பலனில்லை. உயிரிழப்பைத் தவிர்க்க அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலையின் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்துறை அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று (மே.26) நடைபெற்றது. இதனை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.