திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலுள்ள ஜீவானந்தம் தெருவில் கழிவுநீர் பல ஆண்டுகளாக தேங்கியுள்ளது. இந்தத் தெருவில் 200-க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் வாந்தி, பேதி, மர்ம காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், கழிவுநீரில் டெங்கு கொசுக்கள் உருவாகும் அபாயகரமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குழந்தைகளைப் பராமரிப்பதில் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி செயல் அலுவலருக்கு பலமுறை மனு அளித்தும் நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.