கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள மயில், மான், முயல் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், அச்சமயத்தில் சாலைகளில் கடக்கும்போது விபத்து ஏற்படுவது, தெருநாய்களுடன் சண்டை, கிணற்றில் தவறிவிழுவது போன்ற பாதிப்புகள் வன விலங்குகளுக்கு ஏற்படும்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்தில் விவசாயி முரளி என்பவரின் 60 அடி ஆழ கிணற்றில், இரவு தண்ணீர் தேடிவந்த புள்ளிமான் தவறி விழுந்துள்ளது. இதை, அதிகாலை பார்த்த முரளி, தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் அளித்தார்.