தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அய்யங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் - Deepam Vizha Theppa Utsavam

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அய்யங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

தீபத்திருவிழா தெப்ப உற்சவம்
தீபத்திருவிழா தெப்ப உற்சவம்

By

Published : Dec 8, 2022, 6:57 AM IST

திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் உள்ள திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தெடங்கியது. கடந்த 10 நாட்களும் வெகு விமர்சையாக கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.

டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்தனர்.

தீபத்திருவிழா தெப்ப உற்சவம்

நேற்று (டிச.7) இரவு தெப்பல் உற்சவம் தொடங்கியது. தெப்பல் உற்சவம், தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாளான நேற்று ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

இரவு 9 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் உள்ள அய்யங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. அய்யங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் மூன்று முறை பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இன்று (டிச.8) காலை அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறும். தெப்பல் உற்சவம் விழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை மகா தீபத்துக்கு பிளாக் டிக்கெட் விற்ற நபர் யார்?

ABOUT THE AUTHOR

...view details