தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை தீபம்: மலையேற பாஸ் முடிந்ததால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு!

2,668 அடி மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண பாஸ் பெறுவதற்கு பக்தர்கள் போட்டி போட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாஸ் வழங்கத் தொடங்கப்பட்டு மூன்று மணி நேரத்தில் 2,500 பாஸ் கொடுத்து முடிக்கப்பட்டது.

தீபத் திருவிழா: மலையேற பாஸ் முடிந்ததால் பக்தர்கள் தள்ளுமுள்ளு
தீபத் திருவிழா: மலையேற பாஸ் முடிந்ததால் பக்தர்கள் தள்ளுமுள்ளு

By

Published : Dec 6, 2022, 3:02 PM IST

திருவண்ணாமலை:திருக்கார்த்திகை தீபத் திருவிழா 10ஆம் நாளான இன்று மாலை சரியாக 6 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

இந்நிலையில் பக்தர்கள் விரதம் இருந்து மலை ஏறுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம், முதலில் வரக்கூடிய 2,500 நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்கு இன்று காலை 6 மணிக்கு கவுண்டர் திறக்கப்பட்டது. கவுண்டர் திறக்கப்பட்ட 3 மணி நேரத்தில் 2,500 பாஸ் கொடுக்கப்பட்டு முடிந்தது.

தீபத் திருவிழா: மலையேற பாஸ் முடிந்ததால் பக்தர்கள் தள்ளுமுள்ளு

அப்போது பக்தர்கள் மலையேறும் பாஸ் பெறுவதற்கு முயற்சி செய்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காலை முதலே காத்திருந்து மலை ஏற பாஸ் கிடைக்காததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருக்கார்த்திகை தீபத்திருவிழா...பழனியில் குவிந்த பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details