திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாவட்டத்தைப் பற்றிய சிறப்பு அம்சங்களைக் கொண்ட, புத்தகத்தை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, 2019ஆம் ஆண்டிற்கான சிறப்பு புத்தகம் வெளியீட்டு விழா இன்று அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், இந்த ஆண்டிற்கான சிறப்பு புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டார். அந்த சிறப்பு மலரை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.
"வளம் வளர்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டம்" என்கின்ற தலைப்பில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு புத்தகத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல்வேறுப் பகுதிகளில் மக்கள் செய்து வரும் தொழில்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து, இந்தப் புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் தீபத்திருவிழாவை ஒட்டி விற்பனைக்கு வைக்கப்படும். மேலும், இந்தப் புத்தகம் 150 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் புத்தகம் வடிவில் அமர்ந்து வாசித்த 1000 மாணவர்கள்!