தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாப மரணம்! - former death

திருவண்ணாமலை: ஆரணியில் பெய்த தொடர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death

By

Published : Aug 19, 2019, 5:22 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டத்திலுள்ள குளம் மற்றும் ஏரிகளில் நீர் நிலைகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆரணி அருகே உள்ள பையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் என்பவர் வீட்டில் மின்வயரில் கசிவு ஏற்பட்டுள்ளது.

மின்கசிவு ஏற்பட்டு கூலித்தொழிலாளி மரணம்

இந்நிலையில், வீட்டில் மின்சாதனத்தை பயன்படுத்த முயன்றபோது மின்கசிவு ஏற்பட்டு வெங்கடேசன் மீது மின்சாரம் தாக்கி சம்பவடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் வெங்கடேசனை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details