தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் போராட்டம்

திருவண்ணாமலை: மாத்திரைகள், உணவு சரியாகக் கொடுக்காத ஆயுஷ்கேர் மருத்துவமனையைக் கண்டித்து கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : May 4, 2021, 10:00 AM IST

அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் போராட்டம்
அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. நாள்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் திருவண்ணாமலையில் உள்ள ஆயுஷ்கேர் மருத்துவமனையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா நோயாளிகளுக்கு அந்த மருத்துவமனையில் சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்படாமல் இருந்து வருவதாகவும், நோய் எதிர்ப்புச்சக்திக்கான மாத்திரைகளை முறையாக வழங்கப்படவில்லை என்றும் அங்கிருக்கும் நோயாளிகள் கூறுகின்றனர். அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி கரோனா வார்டில் உள்ள 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து நோயாளிகள் அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே செல்ல முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனை பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் நோயாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக உணவு வழங்கப்படும் என்றும், கழிவறைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் நோயாளிகள் உள்ளே சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details