திருவண்ணாமலை: சமூக ஆர்வலர் ராஜ்மோகன்சந்திரா என்பவர், கடந்த 2012-ம் ஆண்டு செங்கம் சாலையில் அமைந்துள்ள சிங்கமுக தீர்த்தம் அருகில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்கின்ற வெங்கடேசன் உட்பட 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கின் தீர்ப்பை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட முக்கியக் குற்றவாளியான திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன், மீனாட்சி, விஜயராஜ், சடையன் மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கு 149 மற்றும் 302 பிரிவின்கீழ் ஆயுள் தண்டனையும், தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.