திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 17,206 சுகாதார பணியாளர்களுக்கு முதல்கட்டமாக மாவட்டத்திலுள்ள ஆறு இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படவுள்ளது.
அதன்படி ஆரணியை அடுத்த எஸ்வி நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.