தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு! - திருவண்ணாமலை கரோனா நிலவரம்

திருவண்ணாமலை: இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470ஆக உயர்ந்துள்ளது.

Corona positive cases increase in Tiruvannamalai
Corona positive cases increase in Tiruvannamalai

By

Published : Jun 4, 2020, 6:33 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 3) வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 465ஆக இருந்தது. இன்று புதிதாக ஐந்து பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதன் மூலம், அந்த எண்ணிக்கை 470ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து வந்த இரண்டு பேர், மும்பையில் இருந்து வந்த ஒருவர், உள்ளூரில் இருவர் என ஐந்து பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 150ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவண்ணாமலை நான்காவது இடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details