நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் நடமாடும் நபர்களை கட்டுப்படுத்தும் வகையில் ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கான ‘smart cop’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி இன்று தொடக்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் பேசியதாவது," தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இருசக்கர வாகனம் மற்றும் தேவையற்ற வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்காக, திருவண்ணாமலை காவல்துறையின் சார்பாக ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.